சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையே, மதராஸி படத்தின் பாடல்களும் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டன. இந்நிலையில், படத்தின் முழு ஆல்பம் நேற்று வெளியிடப்பட்டது. தற்போது தணிக்கை குழு ”மதராஸி” திரைப்படத்திற்கு U\A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.