தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகக் குழித்துறை மேற்கு ரயில் நிலையம் செல்லும் சாலையில் தேங்கிய கழிவுநீர் வடிகால் மூலம் அகற்றப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை மேற்கு ரயில் நிலைய சாலைக் குண்டும் குழியுமாகக் காட்சியளித்ததுடன் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி காணப்பட்டது.
இதனால், ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளானதாகத் தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
இந்நிலையில், தற்காலிகத் தீர்வாக ரயில் நிலையம் செல்லும் சாலையில் தேங்கி நின்ற கழிவு நீர் ரயில்வே அதிகாரிகளின் முயற்சியால் அகற்றப்பட்டது.
மேலும், வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரயில் நிலையம் சாலையில் தேங்குவதைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.