மம்முட்டி நடித்த களம் காவல் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
மம்முட்டி நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் மற்றும் பசூக்கா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மம்முட்டியின் அடுத்த திரைப்படமான களம் காவல் படத்தை ஜித்தின் கே ஜோஷ் இயக்கியுள்ளார்.
இதுவரை பார்த்திராத கதாப்பாத்திரத்தில் மம்முட்டி நடித்துள்ளார். படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. வில்லத்தனமான சிரிப்பு காட்சி இடம்பெற்றுள்ள இப்படத்தின் டீசர்க் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
			















