இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7. 8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பொருட்களின் மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தி அறிவித்ததை அடுத்து உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 6 புள்ளி 5 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 7 புள்ளி 8 சதவீதமாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
சேவைத் துறையின் சிறப்பான வளர்ச்சியே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணம் என்றும், 2011-12-ஆம் ஆண்டு விலைகளின்படி, இந்தியாவின் உற்பத்தி 47 புள்ளி 89 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், சுரங்கத் துறை 3 புள்ளி ஒரு சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளதாகவும், மின்சாரம், எரிவாயு மற்றும் நீர்ப் போன்ற துறைகளை உள்ளடக்கிய பயன்பாடுகள் புள்ளி 5 சதவீதம் என்ற மிகக் குறைந்த வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.