சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில், போட்டி போட்டுக்கொண்டு சென்ற ஒரு மாட்டு வண்டி சாலையோர மரத்தில் மோதி சேதமடைந்தது.
ராயல் செட்டி வயல் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இதில் 32 ஜோடி மாடுகள் பங்கேற்ற நிலையில், போட்டிப் போட்டுக்கொண்டு மாட்டு வண்டிகள் முன்னேறிச் சென்றன.
அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்து மரத்தின் மீது மோதிய மாட்டு வண்டி முற்றிலும் சேதமடைந்தது.