நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடியை விரட்டிய வளர்ப்பு நாயின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், கோத்தகிரி தனியார் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த கரடியை வளர்ப்பு நாய் ஓட ஓட விரட்டியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.