அண்மையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துப் பாகிஸ்தானில் பல பேர்களின் உயிர்களை இந்தியா காப்பாற்றியது. ஆனால், இந்த விவகாரத்திலும் பாகிஸ்தான் இந்தியாவைக் குறைகூறி வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ளதைப் போலவே, பாகிஸ்தானிலும் கடுமையான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இந்தியாவில் பாயும் ரவி, செனாப், சட்லஜ் நதிகளில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நதிகளின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள அணைகளைத் திறக்க இந்தியா அண்மையில் முடிவெடுத்தது.
திடீரென அணை நீரைத் திறந்து விட்டால், அந்த நீர்ப் பாகிஸ்தானில் உள்ள பல கிராமங்களை இருந்த இடம் தெரியாமல் செய்துவிடும். எனவே, அணை நீர்த் திறக்கப்படுவது குறித்து பாகிஸ்தானுக்கு இந்தியா முறையாக எச்சரிக்கை விடுத்தது. இதன் பயனாக, பாகிஸ்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பற்றப்பட்டன.
இப்படி இந்தியா உதவி செய்திருந்தபோதிலும், பாகிஸ்தான் அதிலும் என்ன குறைக் கண்டுபிடிக்கலாம் எனவும், எத்தகைய பொய் குற்றச்சாட்டுகளைக் கூறலாம் எனவும்தான் யோசித்து வருகிறது.
அண்மையில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர்க் கவாஜா முகமது ஆசிப், இந்தியா திறந்து விட்ட நீரில் குப்பைகளும், கால்நடைகளும் அதிகளவில் அடித்து வரப்பட்டதாகக் கூறினார். மேலும், அந்த நீரில் பல சடலங்கள் மிதந்து வந்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால், அவர்க் கூறிய இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சரின் இந்தக் கருத்தை சமூக வலைதளங்களில் அந்நாட்டு மக்களை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். பாகிஸ்தான் இந்த விவகாரத்திலும் அரசியல் செய்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர்கள், வீண் குற்றச்சாட்டுகளைக் கூறுவதை நிறுத்திவிட்டு அணைகளையும், கால்வாய்களையும் கட்டும்படி வலியுறுத்தியுள்ளனர்.
உள்கட்டமைப்பை மேம்படுத்தி, நீர் மேலாண்மையை மேம்படுத்துவதுதான் தற்போது நாம் செய்ய வேண்டியது எனவும் பாகிஸ்தான் மக்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
மழைப் பாதிப்புகளை எதிர்கொள்வதில் அரசு அலட்சியமாகச் செயல்பட்டதை மறைக்க, இந்தியா மீது குறைக் கூறி மக்களைத் திசை திருப்பி விடலாம் என நினைத்தது பாகிஸ்தான். ஆனால், அந்நாட்டு மக்களே அதனை எதிர்க்கத் தொடங்கியுள்ளது, பாகிஸ்தானுக்கு backfire ஆக மாறியுள்ளது.