ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு எல்லையான நங்கர்ஹாரின் ஷின்வார் மாவட்டத்தின் மீது பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்கு ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.