நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் டூவிலர் பார்க்கிங் தொடர்பாக மாணவர்களை இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
வரலாற்றுத் துறையில் முதலாம் ஆண்டு படித்த ஆகாஷ் என்ற மாணவர் டூவிலர் பார்க்கிங்கில் பைக்கை நிறுத்தாமல், கேண்டின் அருகே நிறுத்தியுள்ளார்.
இதனையடுத்துச் சீனியர் மாணவர் அருள் செல்வம் என்பவர்த் தகராறில் ஈடுபட, இரண்டாம் ஆண்டு மாணவர் லட்சுமி நாராயணன் என்பவர் ஆகாஷுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.
இதனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் லட்சுமி நாராயணன், அருள்செல்வம் இருவரும் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பேட்டைப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.