ஓசூர் அருகே விவசாயத்தின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் ஏர்பிடித்து உழவு மேற்கொள்ளும் விநாயகர் சிலையை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்துச் சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சமணப்பள்ளி பகுதியில் விநாயகர்ச் சதுர்த்தியை முன்னிட்டு இளைஞர்கள் சார்பில் விவசாயத்தின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
விவசாயமும் தொழிலும் இரு கண்கள் என்ற கருத்தை அனைவருக்கும் எளிமையாக விளக்கும் விதமாக ஏர் உழுவது போல் விநாயகர் சிலையை வைத்துள்ளனர்.
மேலும், இந்த அரங்கத்தில் அம்மன் மற்றும் சிங்கத்தின் சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. இந்த விநாயகர் சிலையை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்துச் சாமி தரிசனம் செய்தனர்.