சேலம் ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வதில் தனியார் நிறுவன மற்றும் உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
சேலம் ரயில்நிலையம் சந்திப்புக்குத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் பயணிகள் வந்துசெல்கின்றனர்.
இங்கு தனியார் நிறுவனங்களின் டாக்ஸிகள், உள்ளூர் டாக்ஸிகள் பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
இருப்பினும் ஆன்லைனில் புக்கிங் செய்யாத பயணிகளையும் தனியார் டாக்ஸி நிறுவனங்கள், ஏற்றிச் செல்வதாக உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்கள் குற்றம்சாட்டினர்.
இது தொடர்பாக இருதரப்பினரிடையே கருத்துவேறுபாடு நிலவியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பயணிகளை ஏற்றிச்செல்வதில் இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் உள்ளூர் கால்டாக்ஸி ஓட்டுநர் ரவி காயமடைந்தார். தகவலறிந்த போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.