பாஜகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகத் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
அவர்களுக்கு அறிவுரை வழங்கிய இபிஎஸ், திமுக ஆட்சியில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகளைக் கண்டித்து அதிகளவு போராட்டங்களை நடத்த வேண்டுமென அறிவுறுத்தினார்.
மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்திய இபிஎஸ், அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவினருடன் அதிமுகவினர் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.