இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!
Sep 12, 2026, 10:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 07:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய மருந்துகளுக்கு உடனடி சுங்க வரியில் இருந்து அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. தனது சுங்க வரி கொள்கைகள் மூலம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதிபர் டிரம்ப், இந்திய மருத்துவத்துறை முன்பு மட்டும் அடிபணிந்து நடக்கக் காரணம் என்ன? இந்தச் செய்தித் தொகுப்பில் விரிவாகக் காணலாம்…

இந்திய இறக்குமதி பொருட்கள் மீது 50 சதவீத வரிகளை விதித்துள்ள அமெரிக்கா, இந்திய மருந்துகளுக்கு மட்டும் உடனடி சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் மலிவான சுகாதாரச் சேவைகளை வழங்கும், முக்கிய generic medicine எனப்படும் பொதுமருந்துகள் கிடைப்பது பாதிக்கப்படவில்லை.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொதுமருந்துகள் அமெரிக்கச் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதனால், இந்திய மருந்துகள் அமெரிக்க MEDI CARE திட்டத்திற்கு மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. அவற்றுக்குச் சுங்க வரி விதிக்கப்படும் பட்சத்தில் அமெரிக்க மருத்துவ சேவைகளின் செலவுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

கடந்த ஆண்டு, அமெரிக்கா எந்தெந்த நாடுகளிலிருந்து மருந்துகளை அதிகமாக இறக்குமதி செய்கிறது எனப் பார்த்தால், முக்கியமாக இந்தியா, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி முன்னிலை வகிக்கின்றன. இந்தியாவிலிருந்து அமெரிக்கா 12 ஆயிரத்து 471 மில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துகளை இறக்குமதி செய்துள்ளது.

இது அந்நாட்டின் மருந்து இறக்குமதியில் 5.9 சதவீதம் ஆகும். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவிற்கு இது 11.9 சதவீத வளர்ச்சி எனப் புள்ளி விவரங்கள் எடுத்துரைக்கின்றன. அதே நேரத்தில், அமெரிக்கா, சுவிட்சர்லாந்திலிருந்து 18 ஆயிரத்து 858 மில்லியன் டாலர், ஜெர்மனியிலிருந்து 17 ஆயிரத்து 164 மில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துகளை இறக்குமதி செய்திருந்தது.

இந்தியா தனது மருந்துகளை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கின்றன. குறிப்பாக நடப்பாண்டில் இந்தியா அமெரிக்காவிற்கு 9 ஆயிரத்து 784 மில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளது.

இது இந்தியாவின் மொத்த மருந்து இருப்பில் 39.8 சதவீதம் ஆகும். அதேபோல, இங்கிலாந்திற்கு 781 மில்லியன் டாலருக்கும், தென் ஆப்ரிக்காவிற்கு 637 மில்லியன் டாலருக்கும், பிரான்ஸுக்கு 586 மில்லியன் டாலருக்கும், கனடாவிற்கு 540 மில்லியன் டாலருக்கும் இந்தியா மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.

இந்தப் புள்ளி விவரங்கள் இந்திய மருந்துகளின் முக்கியத்துவத்தையும், அமெரிக்கா அதனை எந்த அளவிற்கு நம்பியுள்ளது என்பதையும் எடுத்துரைக்கின்றன. இந்நிலையில், அமெரிக்கா வழங்கிய சுங்க வரி விலக்கு காரணமாக, முக்கிய இந்திய மருந்து நிறுவனங்கள் அமெரிக்கச் சந்தையில் குறிப்பிடத்தக்கப் பங்குகளை பாதுகாக்க முடிந்துள்ளது.

ஒருவேளைப் பொது மருந்துகளுக்கும் சுங்கம் விதிக்கப்பட்டிருந்தால், மருந்து நிறுவனங்களிடையே விலைப் போட்டி அதிகரித்து, சந்தையில் போட்டித்திறன் குறையும் அபாயம் ஏற்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Tags: இந்தியாவுக்கு 50 % வரிவிதிப்புPresident Trump bows down to Indian medicines: The reason for exempting them from customs dutiesஅடிபணிந்த அதிபர் டிரம்ப்IndiaamericausaDonald Trump
Share
Tweet
SendShare
Previous Post

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

Next Post

அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies