தொழிற்சாலைகளுக்குள் மட்டும் இயக்கப்படும் வாகனங்கள், மோட்டார் வாகன வரி செலுத்த தேவையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொழிற்சாலை என்பது பொது இடம் இல்லை எனக் கூறிய நீதிபதிகள், மோட்டார் வாகன வரியின் அடிப்படைகளை எடுத்துரைத்தனர். இதனால் அவ்வாறான வாகனங்களுக்கு வரி விதிப்ப்தை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.