கர்நாடகாவில் 9ம் வகுப்பு மாணவி பள்ளி கழிவறையில் குழந்தைப் பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாத்கிர் மாவட்டத்தில் அரசு உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு மாணவி, கழிவறையில் வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருக்கிற சத்தத்தைக் கேட்டதும், சக மாணவிகள் வார்டனிடம் தகவல் அளித்துள்ளனர்.
அவர் வந்து பார்த்தபோது மாணவி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தது தெரியவந்தது. உடனடியாகச் சிறுமியும், குழந்தையும் மீட்ட பள்ளி நிர்வாகத்தினர், அங்கு உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக மாநில குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கி உள்ளது.