திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு கொடுக்க வந்த முதியவரைத் திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேத்தாண்டபட்டி சர்க்கரை ஆலைப் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் மனு அளிப்பதற்காகத் தனது மனைவியுடன் சென்ற ராஜேந்திரன் என்பவரைத் திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்ச் சுரேஷ் தாக்கியுள்ளார்.
மேலும், உடன் சென்ற ராஜேந்திரனின் மனைவியையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜேந்திரனை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்துத் தம்பதியர் காவலநிலையத்தில் புகாரளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.