தமிழகச் சட்டமன்ற தேர்தலுக்காக ஐதராபாத்தில் இருந்து மதுரைக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டன.
தமிழகச் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகத்திற்குக் கொண்டுவரப்படுகின்றன.
அதன்படி ஐதராபாத்தில் இருந்து ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஆயிரத்து 300 விவி பேட் இயந்திரங்கள் லாரி மூலம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டுவரப்பட்டன.
பின்னர் இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பத்திரமாக வைக்கப்பட்டன. இதனிடையே வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டது தொடர்பாக அரசியல் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறி அதிகாரிகளுடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.