சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித்தீர்தது. அதிகபட்சமாக மணலியில் 27 சென்டி மீட்டர் மழை பதிவாகியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் சென்னையில் கோடம்பாக்கம், கிண்டி, தேனாம்பேட்டை, எழும்பூர், அடையாறு, வியாசர்பாடி, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக மணலியில் 27 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே கனமழையால் திருவொற்றியூர் மாணிக்கம் நகர் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் சென்றனர்.