பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியா உடனான போர் நிறுத்தம் பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம் மற்றும் அமைதியை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் அமைதியை நிலை நாட்டுவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா முழு ஆதரவை வழங்கும் என உறுதியளித்த பிரதமர் மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.