வரவிருக்கும் பண்டிகை காலங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பரிசு பொருட்கள், அலங்கார பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டவேண்டும் என பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார்.
125வது மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன், நிவாரணப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சூரிய சக்தி மின்சார பயன்பாடு, விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, பல்வேறு மாநிலங்களில் நூற்றுக்கணக்கான சூரிய சக்தி அரிசி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளதால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகி உள்ளதாகவும் கூறினார்.
வரும் நாட்களில் ஏராளமான பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பரிசுப் பொருட்கள், அலங்கார பொருட்கள் வாங்கி உள்ளூர் வியாபாரிகளுக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.