பிரதமர் மோடி கூறியது போல் தற்சார்பு பாரதம் உருவாக சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்போம் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளர்.
அவர் விடுத்துள்ள பதிவில், பாரதப் பிரதமர் மோடி, இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் பேரிடர் மேலாண்மை, ஜம்மு காஷ்மீரின் முன்னேற்றம், விளையாட்டு, மத்திய பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள், சூரிய சக்தி, இத்தாலியில் திறக்கப்பட்ட வால்மீகி சிலை எனப் பல்வேறு தலைப்புகள் குறித்து நாட்டுமக்களுடன் கலந்துரையாடினார்.
உரையின் இறுதியில் பிரதமர் குறிப்பிட்டது போல நாம் அனைவரும் நம் தாய்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நேரமிது. உள்ளூர் பொருட்களை அதிகளவில் வாங்கும் போது உள்நாட்டு வர்த்தகம் வலுவடையும்.
அதிலும் உலக அளவில் பொருளாதார நிலைகள் மாறிவரும் காலக்கட்டத்தில் உள்நாட்டுப் பொருட்களுக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவமே நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமிடும்.
எனவே, பிரதமர் குறிப்பிட்டது போல, எதிர்வரும் ஓணம், நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை ஆகிய பண்டிகை காலங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையும் ஆடைகளையும் வாங்குவோம்.
உள்ளூர் வியாபாரிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் நம்மால் இயன்ற ஆதரவை நல்குவோம். தற்சார்பு இந்தியாவை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்குவோம் என நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே சென்னையில் பொதுமக்களுடன் இணைந்து பிரதமரின் இணைந்து நயினார் நாகேந்திரன் பார்வையிட்டார்.