தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றும் சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெற்றார். சங்கர் ஜிவால், டி.ஜி.பி. பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தமிழக போலீஸ்துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பணியை பாராட்டும் விதமாக அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நாளை முதல் சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தில் இந்த புதிய பணியை தொடங்குகிறார். இந்நிலையில் தமிழக போலீஸ் நிர்வாக டிஜிபி வெங்கட்ராமன் தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக தமிழக அரசு நியமித்ததை தொடர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டாார்.
டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சங்கர் ஜிவால் தனது பொறுப்புகளை பொறுப்பு டிஜிபியாக பதவியேற்ற வெங்கட்ராமனிடம் ஒப்படைத்தார்.