சேலம் மாவட்டத்தில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்ட சுமார் 2 ஆயிரம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மேட்டூர் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி அன்று சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழிபாட்டிற்காக சிலைகள் வைக்கப்பட்டன. இச்சிலைகள் அனைத்தும் வாகனங்களில் மேளதாளத்துடன் மேட்டூருக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன.
பின்னர் விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, மேட்டூர் காவிரி படித்துத்துறையில் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன. பக்தர்களின் நலனுக்காக ரப்பர் படகுகளில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.