தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை பொறுப்பேற்றுள்ள நிலையில் அவர் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்..
தமிழகத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் 1994 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சிபெற்று ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
இளங்கலை பொருளாதாரம், பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மைப் படிப்புகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள வெங்கட்ராமன், நிர்வாகப் பிரிவு ஐஜியாக இருந்தபோது காவல்துறையில் காகிதமில்லா பணியை நடைமுறையை வெற்றிகரமாக சாத்தியப்படுத்தினார்.
சிபிசிஐடி மற்றும் சைபர்கிரைம் பிரிவுகளில் ஏடிஜிபியாக பணியாற்றியபோது முக்கியமான பல வழக்குகளை வெற்றிகரமாக கையாண்டுள்ளார். காவல்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்ற வெங்கட்ராமன், கடந்த டிசம்பர் மாதம் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார்.
இந்நிலையில் இன்று பொறுப்பு டிஜிபியாக டிஜிபி அலுவலகத்தில் வெங்கட்ராமன் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.