இந்தியா – சீனா இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து மோடியும், ஜி ஜின்பிங்கும் ஆலோசித்ததாக, வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, எல்லை பிரச்னை குறித்த பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது குறித்து இரு நாட்டு தலைவர்களும் முடிவெடுப்பார்கள் என தெரிவித்தார்.
இரு தலைவர்கள் இடையேயான சந்திப்பின்போது அமெரிக்க வரி விதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டதா என அப்போது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விக்ரம் மிஸ்ரி, இரு தலைவர்களும் சர்வதேச பொருளாதார நிலைமை குறித்து விவாதித்ததாகவும், இந்தியா-சீனா இடையேயான வர்த்தக உறவை எவ்வாறு மேம்படுத்தலாம் என ஆலோசித்ததாகவும் விளக்கம் அளித்தார்.
மேலும், இரு நாடுகள் இடையேயான நேரடி விமான சேவை விரைவில் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.