அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் தொடர்ந்து இருக்கிறார் என்றும், இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எங்களோடு கூட்டணியில் இருந்துதான் போட்டியிட்டார்.
தறபோது வரை எங்களுடன் தான் பயணிக்கிறார். எனவே, அவர் எங்கள் கூட்டணியில் இருக்கிறாரா இல்லையா என்பதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை என தெரிவித்தார்.
முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணம், வழக்கம் போலவே எந்தப் பயனும் இல்லாமல் வெற்றுப் பயணமாகவே அமையும் என்றும் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.