ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் ரஷ்யா மற்றும் சீன அதிபர்கள் நெருக்கம் காட்டியதால், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விழி பிதுங்கி நின்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகைத் தந்த பிரதமர் மோடியுடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் உற்சாகமாகக் கலந்துரையாடினர்.
அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விழிபிதுங்கிக் காட்சியளித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இணையவாசிகள் பாகிஸ்தான் பிரதமரை விமர்சித்துக் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.