வேலூர் அருகே அரசு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
வேலூர் அடுத்த தொரப்பாடி நேதாஜி நகர்ப் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் சேலத்தில் உள்ள தனது மாமியாரை அழைத்துக்கொண்டு அரசு பேருந்தில் வேலூர் நோக்கி வந்துகொண்டிருந்தார்.
கொணவட்டம் அருகே வந்தபோது, அவருக்குத் திடீரென நெஞ்சு வலி ஏற்படவே, ஆம்புலன்ஸ்-க்கு தகவல் அளிக்கப்பட்டது. ராஜாவைப் பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.