ஏலகிரி மலை அருகே மதுபோதையில் தனியார் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது கீழே இருந்து 4 வளைவில் மேலே செல்லும்போது, எதிரே காரில் வந்த இளைஞர்கள் மது போதையில் தனியார் பேருந்து மீது உரசி உள்ளனர்.
மேலும், தாங்கள் வரும்போது வழி விட மாட்டாயா எனக்கேட்டு, பேருந்து ஓட்டுநரைத் தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த ஓட்டுநருக்குத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஏலகிரி மலைப் போலீசார் காரில் வந்த 6 இளைஞர்களையும் கைது செய்தனர்.