சென்னையைச் சேர்ந்த 13 வயது இளம் ரேஸரிடம் நடிகர் அஜித் குமார் ஆட்டோ கிராப் வாங்கிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜெர்மனியில் ஜிடி4 ஐரோப்பியன் கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் நடிகரும், ரேஸருமான நடிகர் அஜித்குமார்க் கலந்து கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக ஜெர்மனியில் சிறுவர்களுக்கான MINI GP கார் பந்தயமும் நடைபெற்று வருகிறது. இதில் சென்னையைச் சேர்ந்த 13 வயது இளம் ரேஸரான ஜேடன் இமானுவேல் பங்கேற்றார்.
இந்தப் போட்டியின் மூலம் ஐரோப்பாவில் 3 சீசன்கள் முழுமையாக ரேஸிங் செய்த இளம் இந்தியர் என்ற சாதனையும் ஜேடன் இமானுவேல் படைத்துள்ளார்.
இந்நிலையில் அவரைச் சந்தித்து நடிகர் அஜித்குமார் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து ஜேடன் இமானுவேலிடம் அஜித்குமார் ஆசையாக ஆட்டோ கிராஃப் பெற்றார். இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.