மூடப்பட்ட கொலோன் பல்கலைக்கழக தமிழ் துறையை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜெர்மனி நாட்டுக்குச் சுற்றுலா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை நூலகத்தைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பல்கலைக்கழக தமிழ்த் துறை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே மூடப்பட்டதாக, ஜனவரி மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன எனக் கூறியுள்ளார்.
ஃபோன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு என்ற நடிகர் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சி, முதலமைச்சரின் நகைச்சுவை நாடகங்களுக்கு சிறிதும் குறைந்ததல்ல என விமர்சித்துள்ள அண்ணாமலை, வீண் விளம்பரங்களை நிறுத்திவிட்டு மீண்டும் தமிழ்துறையை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.