டெல்லியில் தொடர் மழையால் இரவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை நீடித்ததால் டெல்லி-குருகிராம் எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சத்தர்பூர் சாலை, வசந்த் விஹார் ஆகிய பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.