சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், சென்னை தி.நகர், கே.கே.நகர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் நிதி நிறுவனம் மற்றும் ஆடிட்டர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், புரசைவாக்கம் பிளவர் சாலை பகுதியில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனர் அரவிந்த் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.