ஐயா வைகுண்டர் திருநாமத்தை இழிவு செய்வது முறையா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!
Sep 2, 2025, 04:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐயா வைகுண்டர் திருநாமத்தை இழிவு செய்வது முறையா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Web Desk by Web Desk
Sep 2, 2025, 11:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐயா வைகுண்டர் திருநாமத்தை  இழிவு செய்வது முறையா?  என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

விழிப்புடன் செயலாற்றுமா “விடியல்” அரசின் பணியாளர் தேர்வாணையம்! கலியுகத்தை அழித்து உலகில் தர்மயுகத்தை ஸ்தாபிக்க அவதாரமெடுத்த ஐயா வைகுண்டர் அவர்களைப் பற்றி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) ஆங்கிலக் கேள்வியில், “God of hair cutting” என்று இழிவாகக் குறிப்பிட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

தென்தமிழகத்தில் பல லட்சக்கணக்கான மக்களால் போற்றப்படும் தெய்வீக நிலையை அடைந்தவர் ஐயா வைகுண்டர் அவர்கள். அவருக்கு தாய்-தந்தையர் சூட்டிய பெயர் முத்துக்குட்டி என்பதாகும். ஆனால், மக்கள் அவரை சமத்துவத்தின் நாயகனாக, அவதார புருஷனாக முடிசூட்டி, ‘முடிசூடும் பெருமாள்’ என்னும் பெயரால் அழைத்தனர்.

எந்த மொழியிலும் பெயரினை அப்படியே எழுதுவதுதான் வழக்கம். அப்படியிருக்கையில், பெயரை மொழிபெயர்த்து சொல்கிறேன் என்று மக்களால் தெய்வமாகப் போற்றப்படும் ஐயா வைகுண்டர் திருநாமத்தை இப்படி இழிவு செய்வது முறையா? இதே TNPSC தேர்வில், தன் தந்தையார் குறித்தோ, அல்லது, திமுக தலைவர்கள் குறித்தோ இப்படிப்பட்ட தவறுகள் நடந்தால், பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாரா முதல்வர் ஸ்டாலின்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தற்போது நடந்த இத்தவறு மிகவும் கண்டத்திற்குரியது என்றாலும், இதில் எந்தவொரு உள்நோக்கமும் இருக்காது என்று நம்புகிறோம். ஆனாலும், இந்தத் தவறைச் செய்தவர்கள் கண்டிக்கப்பட வேண்டியது அவசியம்.

மேலும், போற்றத்தக்க மகான்கள், தலைவர்கள் குறித்த கேள்விகள் மற்றும் பதிவுகளில் இன்னும் அதிக விழிப்போடு இருப்பதையும், மீண்டுமொரு முறை, இதே போன்ற தவறு நிகழாதிருப்பதையும் திமுக அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழக மக்கள் சார்பாக  வலியுறுத்துவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: பிஜெபிIs it right to denigrate the name of Vaikundar like this?: Nayinar Nagendran questionsDMKMK Stalintn bjptnpsc
ShareTweetSendShare
Previous Post

6-வது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Next Post

எகிப்து : பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Related News

இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் : பிரதமர் மோடி

வறண்டு காணப்படும் மூல வைகை ஆறு – குடிநீர்  தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களையும் காங்கிரஸ், ஆர்ஜேடி அவமதித்துவிட்டனர் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

SCO மாநாட்டில் பிரதமர் மோடிக்கு ராஜமரியாதை : ஓரம் கட்டப்பட்ட பாகிஸ்தான் பிரதமர்!

செக் வைத்த பிரதமர் மோடி : உருவான புதிய கூட்டணி – பணிந்த அமெரிக்கா!

மகாராஷ்டிரா : விநாயகர் சதுர்த்தி விழா – மனைவியுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த நடிகர் அனில் கபூர்!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்ற விழாவில் பெண்கள் கடும் வாக்குவாதம்!

E-20 பெட்ரோல் கொள்கையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!

கனடா : காட்டுத்தீயால் குடியிருப்புகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்!

சென்னை : தனியார் பட்டா இடத்தில் பள்ளம் தோண்டி மண் திருட்டு – திமுக ஊராட்சி மன்ற துணை தலைவர் சிறையில் அடைப்பு!

வைகை அணையில் இருந்து 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை : ரயில் பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்!

கேரளா : அரியவகை மூளைக்காய்ச்சலால் 3 மாத குழந்தை உயிரிழப்பு!

ரஷ்யா : ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து!

அமெரிக்கா : நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள்!

திருப்பத்தூர் : விநாயகர் சிலை ஊர்வலத்தில் தாக்குதல் – நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies