நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஆண்கள் ஒற்றையர்ப் பிரிவின் 4வது சுற்றில் ஜோகோவிச், ஜெர்மனியின் ஜான் லெனார்ட் ஸ்ட்ராப்பை எதிர்கொண்டார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஜோகோவிச், 6க்கு 3, 6க்கு 3 மற்றும் 6க்கு 2 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் ஜோகோவிச், டெய்லர் பிரிட்ஸ் உடன் மோத உள்ளார்.