கேரளாவில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது, நடனமாடிய அரசு ஊழியர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
திருவனந்தபுரம் சட்டமன்ற அலுவலக அரங்கில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இதில், வயநாட்டின் சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த ஜுனைஸ் அப்துல்லா என்ற ஊழியர், சக ஊழியர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.