தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே, குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தரக்கோரி பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குலசேகரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 13ஆவது வார்டில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லையெனக் கூறப்படுகிறது. எனவே நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தைப் பெண்கள் முற்றுகையிட்டனர்.
அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதால் வட்டார வளர்ச்சி அதிகாரி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதுகுறித்துத் தகவல் அறிந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சமரசம் செய்தனர்.