அதிகப் பணிச்சுமை கொடுக்க விரும்பிய ராஜஸ்தான் அணியின் முடிவுக்கு ஒப்புக் கொள்ளாததால், ராகுல் டிராவிட் வலுக்கட்டாயமாகப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாகத் தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் 2011 இல் ராஜஸ்தான் அணியில் இணைந்தார். 2012-13ல் கேப்டனாகவும், 2014-15 இல் ஆலோசகராகவும் இருந்தார். தொடர்ந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அவர்ப் பொறுப்பு வகித்தார்.
அணியை ஒட்டு மொத்தமாக மறு கட்டமைக்கும் வாய்ப்பை, டிராவிட் வசம் கொடுக்க, அணி நிர்வாகம் முன்வந்தது. இதை ஏற்க மறுத்த டிராவிட், பயிற்சியாளர்ப் பதவியில் இருந்து விலகினார்.
இது குறித்து தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் டிராவிட்டை வலுக்கட்டாயமாக ராஜஸ்தான் அணி நிர்வாகம் அணியிலிருந்து நீக்கியதாக ஏ.பி.டி. வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் டிராவிட் அதைப் பற்றிப் பேசும் போது உண்மைத் தெரியும் என்றும் அவர்த் தெரிவித்துள்ளார். மேலும் ராஜஸ்தான் அணி கொடுத்த மற்றொரு வேலையை டிராவிட் ஏற்க மறுத்ததாகவும் அவர்க் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே ராகுல் டிராவிட்டை ராஜஸ்தான் அணி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கியதாக ஏ.பி.டி. வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.