ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இடம்பெறுவதற்கான உடல் தகுதியில் இந்திய வீரர்கள் பும்ரா, சுப்மன் கில் ஆகியோர் தேர்ச்சி பெற்றனர்.
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் வரும் 9ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது.
இந்நிலையில் சுப்மன் கில், பும்ரா ஆகியோருக்கு உடல் தகுதி சோதனை நடத்தப்பட்டது. அதில் இருவரும் தேர்ச்சி பெற்றனர். இதே போல் ரோஹித் ஷர்மாவும் உடல் தகுதி சோதனையில் தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.