கனடாவின் வடமேற்குப் பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ காரணமாக ஃபோர்ட் ப்ராவிடன்ஸ் பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
மக்கள் வாழும் பகுதிக்கு மிக அருகில் தீ பரவி வருவதால், அவர்கள் வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீயின் தாக்கமானது கோர முகம் காட்டுவதால், அதனை அணைப்பது தீயணைப்பு வீரர்களுக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இருப்பினும், விமானம் மூலம் காட்டுத் தீயை அணைக்க அவர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.