நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தாய்மார்களையும் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் அவமதித்துவிட்டதாகப் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
பீகாரில் நடைபெற்ற பாஜகப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகப் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிரான யாத்திரையின்போது, தனது தாய் அவமதிக்கப்பட்டதாக வேதனைத் தெரிவித்தார்.
தனது தாயை மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களையும் காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சியினர் அவமதித்திருப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, மறைந்த தனது தாயாரை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாகக் கவலை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் உள்ள ஒவ்வொரு தாய்மாரிடமும் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.