காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பிஆர்எஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக இருந்தபோது காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
மெடிகட்டா பகுதியில் கோதாவரி நதியுடன் மூன்று துணை நதிகள் இணையும் இடத்தில் அணைக் கட்டி, மாநிலத்தின் 70 சதவீதப் பகுதிகளுக்கு தண்ணீர் வசதி செய்து தருவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். அதன்படி 1.5 லட்சம் கோடி மதிப்பீட்டில் அணைக் கட்டி முடிக்கப்பட்டது.
இந்தக் கட்டுமானத்தில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்த வழக்கினைச் சிபிஐ விசாரணைக்கு மாற்ற ஆளும் காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.
இதைக் கண்டித்து பிஆர்எஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலேஸ்வரம் அணைப் பகுதியில் 100 மீட்டர் நீளமுடைய பதாகையைச் சுமந்து பிஆர்எஸ் கட்சியினர்க் கண்டன முழக்கமிட்டனர்.