சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு கிராமமே மண்ணுக்குள் புதைந்த நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த உள்நாட்டுப் போரால், டார்பூர் பகுதியில் மர்ரா மலை அடிவாரத்தில் உள்ள தாராசின் கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்திருந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தாராசின் கிராமமே மண்ணுக்குள் புதைந்தது.
மேலும் இந்த நிலச்சரிவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகள் உதவுமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.