மிராய் பட டிரெய்லரைப் பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடிகர் தேஜா சஜ்ஜாவின் புதிய திரைப்படமான மிராய் தெலுங்கு சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்.
பேரரசரான அசோகன் மற்றும் அவரது 9 ரகசியங்களைப் பற்றிய கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் நடித்துள்ளார். இந்நிலையில் மஞ்சு மனோஜ் நடித்துள்ள மிராய் படத்தின் டிரெய்லரைப் பார்த்து ரஜினி பாராட்டியுள்ளார்.