ஜிஎஸ்டியில் முக்கிய சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கான ஜிஎஸ்டி கவுன்சிலின் 2 நாள் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமயைில் நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்தில், அரசின் பரிந்துரைக் குறித்து பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க உள்ளது.
2 அடுக்கு வரி மாற்றம் தவிர, புகையிலை, மதுபானம் போன்ற பொருட்களுக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது.
மேலும் வரி வருவாய் இழப்பை ஈடுகட்ட அடுத்த 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளன.
இதுதொடர்பாக மாநில அரசின் அனைத்துக் கோரிக்கைகளும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இதனால், ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவுகள் நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.