டுவைன் தி ராக் ஜான்சன் நடித்துள்ள தி ஸ்மாஷிங் மெஷின் திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் அனைவரின் பாராட்டுதலையும் பெற்றது.
மல்யுத்த வீரர் மார்க் கெர்ரின் உண்மைக் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் அக்டோபர் 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
மார்க் கெர்ரின் கதாபாத்திரத்தில் டுவைன் தி ராக் ஜான்சன் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
அப்போது அனைவரும் எழுந்து நின்று தொடர்ந்து 15 நிமிடங்கள் கைத் தட்டி பாராட்டுகளைத் தெரிவித்தனர். இதனைக் கண்டு டுவைன் தி ராக் ஜான்சன் ஆனந்த கண்ணீர் விட்ட வீடியோ வைரலாகி வருகிறது.