சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு நிகழ்வில், புதின், கிம் ஜாங் உன் உட்பட 26 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
2வது உலகப்போரில் ஜப்பானுக்கு எதிராகப் பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 3ஆம் தேதி வெற்றித் தினத்தை சீனா கொண்டாடி வருகின்றது.
அந்த வகையில், நடப்பாண்டு 80வது ஆண்டு வெற்றித் தின கொண்டாடட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உட்பட 26 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
பின்னர், நிகழ்ச்சியில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பெய்ஜிங்கில் நடைபெற்ற கொண்டாட்டத்திற்குத் திறந்த காரில் வருகைத் தந்த அதிபர் ஜி ஜின்பிங்கை ராணுவ தளபதி வரவேற்றார்.
பின்னர், திறந்த காரில் சென்று ராணுவ அணிவகுப்பு மரியாதைய அதிபர் ஜி ஜின்பிங் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் நடைபெற்ற அணிவகுப்பை அதிபர் ஜி ஜின்பிங்குடன் சேர்ந்து ரஷ்ய அதிபர் புதினும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் மேடையில் அமர்ந்தபடி பார்வையிட்டனர்.
சீனாவின் வெற்றித் தின கொண்டாட்டத்தில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளின் அணிவகுப்பை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.