கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகையை மாணவர்கள் நடனமாடி உற்சாகமாகக் கொண்டாடினர்.
நாடு முழுவதும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கிய ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் வரும் 5 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
கல்வி நிறுவனங்களில் ஓணம் பண்டிகையை மாணவர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூர் தனியார் கல்லூரியில் மாணவர்கள் ஓணம் பண்டிகையைக் கோலாகலமாக கொண்டாடினர்.
தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் அத்தப்பூ கோலமிட்டும், நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.