தங்க கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவுக்கு 102 கோடியே 55 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 3 ஆம் தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், 14 கிலோ தங்கத்தை உடலில் மறைத்துக் கடத்தி வந்த நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 2 கோடியே 67 லட்ச ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து ரன்யா ராவுக்குச் சொந்தமான 34 கோடி மதிப்புடைய சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியது.
இதையடுத்துத் தங்க கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துப் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் 127 கிலோவுக்கு மேல் தங்கம் கடத்தியதாக ரன்யா ராவ் உள்ளிட்ட 4 பேருக்கு 270 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதித்துள்ளது.
அதிலும் குறிப்பாக நடிகை ரன்யா ராவுக்கு மட்டும் 102 கோடியே 55 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.