திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உடனடியாக நிறுத்தப்பட்டது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், சார்ஜா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிகாலை 4.45 மணிக்குத் திருச்சியில் இருந்து 180க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சார்ஜாவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது.
ஓடுதளப் பாதையில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளிலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதைக் கண்டறிந்த விமானி, உடனடியாக விமானத்தை நிறுத்தியுள்ளார்.
இது குறித்து தகவலறிந்து வந்த வல்லுநர்கள் தொழில்நுட்ப கோளாறைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கு மேலாக விமானத்திற்குள்ளேயே காக்க வைக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.